சொல் பொருள்
தட்டு – ஒன்றைச் செய்ய முனைவார்க்கு முதற்கண் ஏதேனும் தடையுண்டாகுமானால் அது தட்டு எனப்படும்.
தடங்கல் – அச்செயலைச் செய்யுங்கால் இடை இடையே ஏற்படும் தடைகள் தடங்கல் எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
சிலர் எடுத்துக் கொண்ட செயல்கள் தொடக்க முதல் இடையூறு ஏதுமின்றி இனிது முடிவதாய் அமையும். அவர்’தட்டுத் தடங்கல்’ இன்றிச் செய்து முடித்ததாக மகிழ்வர். ‘தடையுண்டானால் தடந்தோள் உண்டு’ என்பது புரட்சியுரை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்