சொல் பொருள்
தட்டுதல் – ஏதாவது ஒன்று இடறுதல்
தடுமாறுதல் – இடறுதலால் வீழ்தல்.
சொல் பொருள் விளக்கம்
இது ‘தட்டித்தடுமாறி’ எனவும் வழங்கும்; தட்டுதல் தடையாதலாம். தடுமாற்றம் என்பது கால் தள்ளாடுதல். மிகுமுதியரோ ஒளியிழந்தவரோ நடத்தற்குத் தட்டித் தடுமாறுதல் கண்கூடு. தள்ளாடுதல் ‘தள்ளமாடுதல்’ எனவும் வழங்கும். ‘தள்ளமாட்டாமல்’ இருக்கிறேன் என்பது இறப்பு வரவில்லையே என்னும் ஏக்கத்தில் வருவது. தக்கிமுக்கி, ‘தட்டிமுட்டி’ என்பவை காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்