சொல் பொருள்
(பெ.எ) 1. குறைவுபடாத, 2. கெடாத, அழியாத, 3. தடைப்படாத
சொல் பொருள் விளக்கம்
1. குறைவுபடாத,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
non decreasing, non diminishing, non perishing, without hindrance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460 குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி கண்டும் கழல் தொடி வலித்த என் பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/9-12 தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத தோற்றப்பொலிவைக் கண்டும் கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது பண்பற்ற செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது. நெடு மதில் நிரை ஞாயில் அம்பு உமிழ் அயில் அருப்பம் தண்டாது தலைச்சென்று – மது 66-68 நெடிய மதிலினையும், வரிசையான ஞாயில்களையும், அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும், தடைப்படாமல் மேற்சென்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்