தத்தம் என்பதன் பொருள்கொடுத்தல்,அவரவர்,தம் தம்,ஈகை
சொல் பொருள்
கொடுத்தல்
தம் தம்
அவரவர்
நீர் வார்த்துக் கொடுக்கும் கொடை
ஈகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Theirs, respectively
their, each of their
பயன்பாடு
இதன் படி அமைக்கப்பட்ட 25இந்திய உயர் நீதிமன்றங்கள்’ தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன
தத்தம் பணிகளை செய்து வருகின்றனர்
அரசின் விதிகளுக்குட்பட்டு தத்தம் பணிகளை தொடர வேண்டி கோரிக்கை வைத்தனர்.
சொல் பொருள் விளக்கம்
தம் தம் என்பது ‘தத்தம்’ ஆகின்றது. கொடுத்தல் என்னும் “பொருளது. வந்தவர்களுக்கெல்லாம் தத்தம் பண்ணி விட்டான்” என்பது பழமொழி. தம் பொருளை வந்தவர் தம் பொருளாகக் கொள்ளுமாறு தருதல் தத்தம் ஆகும். தத்து என்பதும் அத்தகு மக்கட் கொடையே. ஒரு வயல் நீர், அதனை அடுத்த வயலுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட மடையைத் தத்துவாய் மடை என்பது உழவர் வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்