Skip to content

சொல் பொருள்

(வி) 1. கெடு(தல்), அழிபடு(தல்), 2. கெடு(த்தல்),

சொல் பொருள் விளக்கம்

1. கெடு(தல்), அழிபடு(தல்),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

perish, become extinct, destroy, ruin

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி – மது 571,572

தொலைவிலுள்ளாரும் அருகிலுள்ளாரும் வடிவழகை விரும்பி வந்த
இளவயதினராகிய பல செல்வந்தரை (அவருடைய)செல்வம்(எல்லாம்) கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு,

உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே – பதி 13/18,19

நெஞ்சம் நிலைகுலைய, துணிந்து செல்வோரின் மனவலிமையைக் கெடுத்து,
நினைத்துப்பார்ப்போர் நெஞ்சம் நடுங்கும் பாழிடங்கள் ஆயின;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *