சொல் பொருள்
(பெ) 1. தமிழ் மொழி, 2. தமிழர்
சொல் பொருள் விளக்கம்
1. தமிழ் மொழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the language Tamil, the Tamil people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் – பரி 26/1 ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியனின் சிறியிலை உழிஞை தெரியல் சூடி கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/8,9 சிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையைச் சூடிக்கொண்டு பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்