சொல் பொருள்
(வி) 1. இறுமாப்புக்கொள், 2. வெற்றிப்பெருமிதம் கொள், 2. (பெ) செருக்கு, இறுமாப்பு,
சொல் பொருள் விளக்கம்
இறுமாப்புக்கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be proud, vain, be exulted, arrogance, haughtiness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு_உற்று தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/21,22 இறுமாப்புக்கொள்ளமாட்டோம், பெருமானே! உன் அன்பினால் விருப்பமுற்றுத் தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே! தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/17,18 உன்னுடைய வெற்றிப் பெருமிதம் இவ்வாறு வேறு விதமாக இருக்க, இவள் தனக்கெனப் பெருமிதம் இல்லாதவள் என்று பெருமையினால் வந்து இங்கு பேசிக்கொண்டிருக்கிறாயே! குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/71,72 சிவந்த கண்களைக் கொண்ட கொலைக்குணமுள்ள காளையை அடக்கிவிட்டேன் நான் என்னும் செருக்கினால் அன்றோ அந்த ஆயர்மகன்?”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்