Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஒன்றோடொன்று பின்னி, பின்னிப்பிணை, 2. நெருங்கிக்கல,

சொல் பொருள் விளக்கம்

1. ஒன்றோடொன்று பின்னி, பின்னிப்பிணை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be intertwined, entangled, crowd, throng

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல் – பட் 97,98

தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும்
மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில்,

குன்று தலைமணந்த புன்_புல வைப்பும் – பதி 30/13

குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலை நில ஊர்களின் மக்களும்

சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ
ஒண் பூ பிண்டி அவிழ்ந்த காவில் – மது 700,701

மரக்கிளைகளில் நெருக்கமாய்க்கூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற)
ஒளிரும் பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *