சொல் பொருள்
(வி) 1. அறைகூவலாக முன்தோன்று, 2. அழைப்பாக முன்தோன்று, 3. ஒன்றுகூடு, ஒன்றுசேர், 4. நிகழ், சம்பவி,
சொல் பொருள் விளக்கம்
1. அறைகூவலாக முன்தோன்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
appear as challenge, appear on request, unite, join together, happen, occur
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க புரையோர் சேர்ந்து என – புறம் 354/1-3 முடிவேந்தர் நேர் நின்று போரிடவரினும் அடங்குதல் அமையாத நிரைத்த காம்பு அணிந்த வேலை நீர்ப்படை செய்யும்பொருட்டு சான்றோர்களாகிய உயர்ந்த வீரர்கள் வந்து கூடினராக எந்தையும் யாயும் உணர காட்டி ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின் மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே – குறு 374/1-4 நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர் மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன; கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/6,7 தீய கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற வளைந்த வெள்ளிய திங்களை குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகணி என்னும் நாள்மீன் வந்து அடைந்ததாக மா என மடலொடு மறுகில் தோன்றி தெற்றென தூற்றலும் பழியே வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே – குறு 32/4-6 பனைமடலைக் குதிரை மா என்று கொண்டு தெருவில் தோன்றி பலர் அறியத் தூற்றலும் தலைவிக்குப் பழிதருவதே! அப் பழிக்கு அஞ்சி வாழ்தலும் பழிதருவதே பிரிவு நிகழுமாயின்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்