Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கட்டு, பிணிப்பு, 2. மலரும் நிலையிலுள்ள பூ, மொட்டு,  3. கயிறு

சொல் பொருள் விளக்கம்

1. கட்டு, பிணிப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fastening, a bud in a flowering stage, cord, rope

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தளை அவிழ் அலரி தண் நறும் கோதை – நற் 367/9

கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த, மணங்கமழும் மாலையை

நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/21-23

மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.

இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2

இளம்பெண்கள் விளையாடும் மொட்டுகள் கட்டவிழ்ந்த கடற்கரைச் சோலை

சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2

சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *