சொல் பொருள்
(பெ) 1. தழையுடை, 2. மயிலிறகுக் கொத்து
சொல் பொருள் விளக்கம்
1. தழையுடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A waist garment of strung leaves and flowers
bunch of peacock’s feathers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204 சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையுடையை திருந்திய வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5 மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்