தாங்கல் என்பது ஏரி, நீர்நிலை.
1. சொல் பொருள்
(பெ) 1. நீர்நிலை, 2. ஏரி, தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது.
(பெ) 3. வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும் பொருளது
தாங்குதல், பொறுத்தல்
ஏங்கி வருவார்க்குத் தாங்கலாக இருப்பது ஏங்கல் தாங்கலாம். இவை முகவை வழக்கு.
2. சொல் பொருள் விளக்கம்
சுமை தாங்குதல் பொறுத்தல் முதலிய பொருள்களில் தாங்கல் வருதல் பொதுவழக்கு. “ அவருக்கு என்மேல் கொஞ்சம் மனத்தாங்கல் ” என்னும் வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும் பொருளது. மனத்தில் துயர் தங்குவதாம் நிலை தாங்கலாயது. தாங்கல் என்பது தங்குதல். > தாங்குதல். இவ்வகையால் தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. “ ஏந்தல், தாங்கல் ” என்பவை இனி “ஏங்கல் தாங்கல்”என்பது ஏங்கி வருவார்க்குத் தாங்கலாக இருப்பது ஏங்கல் தாங்கலாம். இவை முகவை வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
tank. lake
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது – நற் 88/7
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது – நற் 326/3
தழை அணி அல்குல் தாங்கல் செல்லா – குறு 159/1
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என – குறு 256/5
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/21
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/6
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் – அகம் 333/5
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்