Skip to content

தாள் தப்பட்டை

சொல் பொருள்

தாள் – நெல்புள் இவற்றின் தாள்; எழுதுபொருளாம் தடித்ததாளுமாம்.
தப்பட்டை – மேற்குறித்ததாள்களின் சிதைவு; இனித் தப்பைப் பட்டை தப்பட்டையுமாம்.

சொல் பொருள் விளக்கம்

தாள்- புல்லினத்தின் தண்டுகள் சில தாள் எனப்படும். கடிதம் செய்தற்குரிய மூலப் பொருள்களில் பெரும்பாலனவும் புல்லினப் பொருள்களேயாம் என்பதும் எண்ணத் தக்கது. முன்னாளில் பயன்படுத்திய ஓலை, மடல் முதலியவையும் புல்லினம் சார்ந்தவையே. மூங்கில் பிளாச்சு – தப்பை எனப்படும். அது பட்டையாக இருக்கும். ஆதலின் தப்பைப்பட்டை, ‘தப்பட்டை’ என வந்தது ஆகலாம். ‘தாள் தப்பட்டை’ இல்லாமல் பொறுக்கச் சொல்வது வழக்கம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *