சொல் பொருள்
(வி) 1. மேன்மைப்படுத்து, 2. சீர்ப்படுத்து, 3. செவ்விதாக்கு, 4. நன்கு அமை
சொல் பொருள் விளக்கம்
1. மேன்மைப்படுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
improve, elevate, correct, rectify, reform, order properly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் – பதி 32/7 வருந்துகின்ற குடிமக்களை மேன்மைப்படுத்திய சிறந்த வெற்றியும் நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82 நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும் வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/3,4 பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே! இவள் தான் திருத்தா சுமட்டினள் – கலி 109/13 இவள்தான், நன்கு அமைக்கப்படாத சும்மாட்டினை உடையவள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்