சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககாலப் பெண்ணின் பெயர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககாலப் பெண்ணின் பெயர்,
இந்தப் பெண் கண்ணகி என்பார். இப்பாடலின் ஆசிரியர் மதுரை மருதன் இளநாகனார், சிலப்பதிகாரக் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகட்கு முந்தையவர் என்பதால் இவள் கண்ணகி அல்ல என்றும் கூறுவர். கண்ணகியைப் பற்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில், கண்ணகி ஒருமுறைகூட இப்பெயரால் அழைக்கப்படவில்லை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
name of a woman of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி கேட்டோர் அனையர் ஆயினும் வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/9-11 ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணியின் கதையைக் கேட்டவர்கள் அத் தன்மையராக ஆயினும் நாம் விரும்புவோரைத் தவிர பிறர் நமக்கு இன்னாதரே ஆவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்