சொல் பொருள்
துடைத்தல் – இல்லாது செய்தல்
சொல் பொருள் விளக்கம்
துடைத்தல் என்பது தடவுதல் பொருளை விடுத்து துடைத்து எடுத்தலைக் குறித்து வழக்கில் உள்ளது. ‘தண்ணீரைத் துடை’ என்றால் ஈரப்பதமும் இல்லாமல் ஆக்கலைக் குறித்தல் தெளிவு. “அவன் சாப்பிட்டால் பானையைத் துடைத்து அல்லது கழுவி வைத்து விட வேண்டியதுதான்” என்பதில் முழுவதும் தீர்த்து விடுதல் என்னும் பொருளில் துடைத்தல் ஆளப்படுதல் வெளிப்படை. திருடன் வந்து வீட்டைத் துடைத்து வைத்தது போல் ஆக்கிவிட்டான் என்பதும், உன்னை ஒரு நாள் கடையில் வைத்தால் போதும் துடைத்து வைத்தது போலத்தான் என்பதும் மொத்தமாக இல்லாது ஆக்கிவிடும் பொருளவாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்