சொல் பொருள்
துட்டு – கைப்பொருள்
துய்க்காணி – துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு வேண்டும் நிலபுலம்.
சொல் பொருள் விளக்கம்
“துட்டுத்துக்காணி எதுவும் இல்லை” என்று இரங்குவதும், “துட்டுத் துக்காணி உண்டா? என்று வினவுவதும் வழக்காறு.
துட்டு என்பது குறைந்த பொருளையும், துக்காணி என்பது குறைந்த நிலபுலத்தையுங் குறிப்பதாம். அதற்கும் வழியில்லை என்பது இரங்கத்தக்க நிலையை மிகுவிப்பதாம்.
துய்த்தல்-வாழ்வு நுகர்வுக்கு வேண்டும் வாய்ப்பு. அதற்காக முதியர்க்கு சோறுடைக்கென (அன்னவத்திர)ப் பங்கு தரும் வழக்கத்தை அறிவது தெளிவாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்