சொல் பொருள்
(பெ) 1. ஆற்றிடைக்குறை, ஆற்றின் நடுவில் சிறு மேடு, 2. கடல் நடுவே உள்ள சிறு தீவு, 3. கொல்லன் பட்டறையின் தோலால் ஆன ஊதுலைக் கருவி,
சொல் பொருள் விளக்கம்
1. ஆற்றிடைக்குறை, ஆற்றின் நடுவில் சிறு மேடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
islet in a river
bellows
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி – பரி 10/30 பூக்கள் நிறைந்த காட்டாற்றின் நடுவேயுள்ள திட்டுக்களை அடைந்து இரு முந்நீர் துருத்தியுள் முரணியோர் தலைச்சென்று – பதி 20/2,3 கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த, அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா – அகம் 224/2,3 கொல்லன் வலித்து இழுக்கும் துருத்தியினைப் போல வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்