சொல் பொருள்
துருவல் – தேடல், ஆராய்தல்
சொல் பொருள் விளக்கம்
துருவுதல் நுண்ணிதாகத் துளைத்தல் பொருளது. தேங்காய் துருவுதல், துரப்பணம் செய்தல், துரவு (கிணறு) என்பவற்றை நோக்கின் நுணுக்கமாகத் துளைத்தல் பொருளதென்பது துலங்கும். இந்நுணுக்கத் துளைப்பு அடர்காட்டின் ஊடுநோக்கிப் பார்க்கும் பார்வைக்கும், பருப்பொருளின் ஊடே நுணுகியாராயும் ஆய்வுக்கும் பொருளாதல் வழக்காயிற்றாம். “எதையும் மேலாகப் பாராமல் துருவித் துருவிப் பார்ப்பான்” என்பதில் இப்பொருள் விளக்கமாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்