சொல் பொருள்
(பெ) 1. ஆற்றில்/கடலில் இறங்கும் இடம், 2. ஆற்றில்/கடலில் இறங்கி நீராடும் இடம், நீர்த்துறை, 3. பகுதி, பிரிவு, வகைமை, 4. துறைமுகம், 5. சலவைசெய்வோர் ஆற்றில் துவைக்கும் இடம், 6. ஆடல்துறை
சொல் பொருள் விளக்கம்
1. ஆற்றில்/கடலில் இறங்கும் இடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
place where one gets into a river/sea, bathing ghat, branch, field, category, port, riverside where washermen wash the clothes, faculty of dance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 238,239 நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும், துறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117 (நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி கூடு கொள் இன் இயம் – சிறு 228,229 பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத் சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் துறை பிறக்கு ஒழிய போகி – பெரும் 349-351 இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும் 350 துறை பின்னே கிடக்க (கடந்து) போய் துறை செல்லாள் ஊரவர் ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி – கலி 72/13,14 துறைக்குச் செல்லாதவளாய், ஊரினரின் ஆடைகளை சேர்த்துக்கொண்டு வெளுக்கின்ற உன் வண்ணாத்தி காவில் தகைத்த துறை கூடு கலப்பையர் – பதி 41/5 காவடியின் இரு பக்கங்களிலும் சரியாகக் கட்டப்பட்ட, ஆடல்துறைக்கு வேண்டிய கலங்களைக் கொண்ட பையினராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்