சொல் பொருள்
(பெ) 1. தொங்குதல், 2. தூக்கக் கலக்கம், 3. வாளாவிருத்தல், சோம்பியிருத்தல், 4. ஆடுதல், 5. ஒரு சங்க காலப் புலவர்,
சொல் பொருள் விளக்கம்
1. தொங்குதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suspension, drowsiness, being idle, dancing, a poet of sangam age
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை – நற் 135/1 தொங்குதலையுடைய ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின் துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 53,54 (தலைமயிரைத்)துணியால் கட்டிச் சட்டையிட்ட, தூக்கக்கலக்கத்திலும் விரைப்பான நடையுடைய மிக்க அனுபவமுடையோர் (மெய்க்காப்பாளராகக்)காவலாகச் சூழ்ந்து திரிய பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/8,9 பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை, கடலில் செல்லாது வாளாவிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும் வல்லோன் பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் – அகம் 98/19,20 வல்லோன் ஆட்டும் பொறி அமைந்த பாவையைப்போல ஆடுதலை விரும்பின் தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16 தூங்கல் என்னும் புலவரால் பாடப்பெற்ற மிக உயர்ந்த நல்ல புகழ்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்