சொல் பொருள்
(பெ) 1. புகை, 2. தூமகேது, புகைக்கொடி, வால்நட்சத்திரம்,
சொல் பொருள் விளக்கம்
1. புகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smoke, comet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு திரிதரும் கொல் களிறும் போன்ம் – கலி 104/42-44 குன்றாத சினங்கொண்ட அழகையுடைய காளையைப் பார்! இது ஒன்று! அச்சம்தரும் மருந்துப்புகை எழுப்ப, வெகுண்டு சுற்றித்திரியும் கொலைவெறியுள்ள களிற்றினைப் போல் இருக்கிறது மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1 சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும், தூமகேது தோன்றினாலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்