சொல் பொருள்
(பெ) 1. உள்துளை, 2. உள்துளையுள்ள ஒரு பொருள், மூங்கில் குழாய், 3. முங்கிலினாலான நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி
சொல் பொருள் விளக்கம்
1. உள்துளை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tubularity, any tube like a bamboo tube, A flute made of bamboo ;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் பாம்பு – திரு 148-150 நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும், நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய, பாம்புகள் தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21 மூங்கில் குழாயினுள்ளே முதிர்வடைந்த இனிய கள்ளினை நிறைய அருந்தி, இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7 இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்