சொல் பொருள்
(வி.அ) 1. தெளிவாக, 2. விரைவாக
சொல் பொருள் விளக்கம்
1. தெளிவாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clearly, distinctly, speedily, swiftly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம் யானும் தெற்றென உணரேன் – அகம் 48/3,4 மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை நானும் தெளிவாக அறியேன் பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 174,175 பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக (உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்