சொல் பொருள்
1. (வி) 1. தூவு, 2. நீர் போன்றவை கலங்கிய நிலையில் மாறி சுத்தமாகு, 3. நம்பு, 4. ஐயம் தீர், 5. அறி, 6. உறுதியாகத் தெரிவி, 7. தெளிவுபடுத்து,
2. (பெ.அ) தெளிவான, 3. (பெ) தெளிவு,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பொருள்பிணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sprinkle as water, become clear, limpid, transparent, as water by the settling of sediment, trust, clear up, understand, perceive, affirm clearly, cause to believe, make known, clear, clearness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5 நறுமண நீர் தூவப்பெற்ற நாறும் கொத்துக்களாலான பூமாலை கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10 விளக்கம் பொருந்திய சுனையில் உள்ள கலங்காமல் தெளிந்த, பளிங்கினைப் போன்ற இனிய நீரில் விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10 நிலைகெட்டுப்போகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம். சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/13 கொஞ்சமாய்ப் பேசுபவளே! உன் ஐயம் தீர்வாயாக என்று அவளைத் தேற்றியதன் விளைவு அல்லவா, இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார் நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/53,54 இத்தகைய வனப்புகளைக் கொண்ட கருப்பழகியே! உன்னிலும் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை! அறிந்துகொள்! கிட்டே வா! தாம் வர தெளித்த பருவம் காண்வர இதுவோ என்றிசின் மடந்தை – நற் 99/4,5 தான் திரும்பி வருவேன் என்று உறுதியாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே! ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/11,12 குன்றாத புகழையுடைய கூடல்மா நகரில் அரும்புகள் மலரும் நறிய முல்லைப் பூக்களில் தேனீக்கள் களிப்புடன் ஆரவாரிக்கும் இன்பமான பொழுது என்று அவரிடம் தெளிவுபடுத்துவார் இருந்தால்? தெளி தீம் கிளவி யாரையோ – நற் 245/6 தெளிவான இனிய சொற்களும் உடையவளே! யாரோ குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/5 குருதி படிந்த கொம்பிலிருக்கும் மிக்க கறை தெளிவுபெற அந்த மழை கழுவிவிட்டது;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்