சொல் பொருள்
(வி) 1. உவட்டு, திகட்டு, 2. திரளு, 3. ஒலியெழுப்பு,
சொல் பொருள் விளக்கம்
1. உவட்டு, திகட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cloy, sate, assemble, collect together, make noise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660 கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை உண்டு திகட்டி நிற்க மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218 மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம் (தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய, அவல்-தொறும் தேரை தெவிட்ட – ஐங் 453/1 பள்ளங்கள்தோறும் தவளைகள் ஆரவாரிக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்