Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இனிய மணம், வாசனை, 2. தேன், 3. யானையின் மதநீர், 4. இனிமை, 5. நெய், 6. தேனீ

சொல் பொருள் விளக்கம்

இனிய மணம், வாசனை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

honey, must of an elephant, sweetness, oil, honey bee

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

திலகம் இட்ட இனிய மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை – மலை 399

தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும் உடைய

தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 31

மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை

வேறு பட கவினிய தேம் மா கனியும் – மது 528

ஒன்றற்கொன்று வேறுபட்ட இனிய மாவின் பழங்களையும்

தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9

அகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்

தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே – குறு 22/5

வண்டுகள் மொய்க்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய உன்னோடும்தான் பயணம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *