சொல் பொருள்
(வி) 1. மெலிவடை, 2. இல்லாது போ, 3. குறை, 4. அழி, கொல்,
சொல் பொருள் விளக்கம்
மெலிவடை, இல்லாது போ, குறை, அழி, கொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grow thin, obliterated, grow less,, kill, destroy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/1,2 விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில் தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின் நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/9 நோவேன் யான், கெடுவதாக என் வாழ்நாள் ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/9,10 நெற்றி மிகவும் தேய்ந்திருக்கிறது, ஆனால் அதும் பிறையும் இல்லை; முகம் மாசற்று விளங்குகிறது, ஆனால் அது முழுமதியும் இல்லை; செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5 தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்