சொல் பொருள்
மிதியடி போடுதலைத் தொடுதல் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும்
தொடுதல் – அயற்பால்மேல் கைபடல், வஞ்சினம் கூறல்
சொல் பொருள் விளக்கம்
காலில் அணியும் மிதியடி போடுதல் தொடுதல் எனப்படும். மிதியடி தொட்டார் என்பர். கையால் தொடுதல் அன்றிக் காலால் தொடுதலுக்கும் ஆயது. கையில் தொடுக்கும் தொடி (வளையல்) என்பதை எண்ணலாம். மிதியடி போடுதலைத் தொடுதல் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும். ‘தொடு தோல்’ (செருப்பு) என்பது இலக்கிய ஆட்சி.
தொடுதல் என்பது இயல் நிலையில் குறைவற்றது. ஆனால் தொடுதற்கு உரிமையில்லாரைத் ‘தொடுதல்’ என்னும் வழக்குப் பொருளில் இடம் பெறும்போது பழிப்புக்குரியதாகின்றது. ‘தொடுப்பு’ என்பதும் பாலுறவுச் சொல்லாக வழக்கில் உண்டு. இனிப் பகையுடையார் “என்னைத் தொடு பார்க்கலாம்; தொட்டுவிட்டு உயிரோடு போய்விடுவாயா?” என வஞ்சினங்கூற இடமாக இருப்பதும் தொடுதலாக அமைகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்