சொல் பொருள்
தொட்டாற் சுருங்கி – அழுகுணி, சொல்லப் பொறாதவன்
சொல் பொருள் விளக்கம்
தொட்டவுணர்வால், தானே சுருங்கும் செடி, தொட்டாற்சுருங்கி. அதனைப் போலச் சில குழந்தைகள் தொட்டாற் சுருங்கி எனப்படும். ஒரு சொல்லைச் சொல்லப் பொறுக்காமலும், தொட்டால் தொடப்பொறுக்காமலும் அழும் குழந்தையைத் தொட்டாற் சுருங்கி என்பர். அந்நிலையில் வளர்ந்தவர்களும் இருப்பதுண்டு. விளையாட்டுக்கு ஒன்றைச் சொன்னாலும் விளையாட்டாகக் கொள்ளாமல் சண்டைக்கு வந்து விடுவர். அப்படி அவர்கள் இயல்பு இருப்பதை அறிந்து பலரும் அதே விளையாட்டுக் காட்டி அத்தன்மையே இயல்பாகப் போய்விட ஆவதும் உண்டு. “அது தொட்டாற் சுருங்கி, உன்னிடம் வராது” என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்