Skip to content

சொல் பொருள்

1. (வி.எ) தொடு என்பதன் இறந்த கால வினையெச்சம்

2 (இ.சொ) தொடங்கி, முதலாக, 

1.1. தொட்டு – தோண்டி

1.2 தொட்டு – வாத்தியங்களை வாசித்து

1.3 தொட்டு – கட்டி, பிணித்து

1.4  தொட்டு – தீண்டி

சொல் பொருள் விளக்கம்

தொடு என்பதன் இறந்த கால வினையெச்சம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

beginning with, digging, playing musical instruments, fastening, touching

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53

கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை

கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363

குளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு

மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
தட மென் தோள் தொட்டு தகைத்து – பரி 20/55,56

இணக்கமுள்ள செழித்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி

தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/56

தலையினால் தொட்டு உறுதியாகச் சொல்கிறேன்

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன்
நாடு செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப – பொரு 137,138

பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல
நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *