சொல் பொருள்
பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு
உருண்டை
சொல் பொருள் விளக்கம்
பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. முற்காலத்தில் தோப்பி என்பதொரு மதுவகை சொல்லப்பட்டது. நெல்லரிசியில் இருந்து எடுத்த மதுப்போலப் பனம்பழச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்டது தோப்பி எனப்பட்டதாகலாம் என்பதை நினைவூட்டும் ஆட்சி இது. காற்றுப் புகுந்து நீர்க்குமிழாதலும், துணி குமிழாதலும் தொப்பி எனப்படுதல் கொண்டு தொப்பி உருண்டைப் பொருளதாதல் அறியலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்