சொல் பொருள்
1. (வி) கடவுளை வழிபடு, வணங்கு,
2. (பெ) தொழுவம், மாடுகளை அடைக்கும் இடம்,
சொல் பொருள் விளக்கம்
கடவுளை வழிபடு, வணங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pray, worship
cattle-stall
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193 மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் வழிபட்டுவரும் பிறையைப் போல மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 160 மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும் அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/14,15 வழிப்பறிக் கள்வர்கள் பசுக்கள் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனவாக, அவற்றின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்