சொல் பொருள்
பெண்டிருள் நல்லாள் என்னும் பொருளமைந்த நங்கை என்பது நாத்துணையாள் என்னும் உறவுமுறைச் சொல்லாகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது
கணவரின் மூத்தாளை (அக்கையை) நங்கை என்பது கோவை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பெண்டிருள் நல்லாள் என்னும் பொருளமைந்த நங்கை என்பது நாத்துணையாள் என்னும் உறவுமுறைச் சொல்லாகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது. “நாத்தூண் நங்கை” என்று சிலப்பதிகாரத்து வரும் மதுரை ஆயர்குடி வழக்கு இன்றும் ஆவினன்குடி வட்டார வழக்காக இருத்தல் பழம்பொருட் புதையலாய்த் திகழ்கின்றது. கணவரின் மூத்தாளை (அக்கையை) நங்கை என்பது கோவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்