சொல் பொருள்
நட்டாற்றில் விடுதல் – ஒரு பணியின் நடுவே கை விடுதல்
சொல் பொருள் விளக்கம்
நட்டாற்று (நடு ஆற்று) வரை வெள்ளத்தில் படகில் ஏற்றிக் கொண்டு போடீநு இடையே உன்பாடு எனத் தள்ளி விட்டால் அவன் பாடு என்னாம்? கரையிலேயே இருந்திருப்பான்; வெள்ளம் வடித்தபின் வந்திருப்பான்; நீந்திக் கடக்கமுடியுமா என எதிர்நோக்கியிருப்பான். இவற்றுக்கு வாய்ப்பெதுவும் இல்லாமல் வெள்ளத்தோடு வெள்ளமாகப் போகவிடுதல் வெங்கொடுமையாம். இப்படி ஓர் இடரான செயலைத் தொடங்கி அதன் இடையே உதவாமலும் எதிரிட்டும் இருத்தல் நட்டாற்றில் விடுதலாம். இது நட்டாற்றில் தள்ளல், கைவிடல் எனவும் வழங்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்