சொல் பொருள்
நட்டு – பெரும்பரப்பில் நடுவாக அமைந்த இடம்.
நடு – நடுவேயமைந்த இடத்தின் சரியான மையப்புள்ளி.
சொல் பொருள் விளக்கம்
நடுப்பகுதி வேறு; நடுப்பகுதியின் மையம் வேறு. வட்டத்துள் வட்டம் மையம் எனினும் அதன் மையப்புள்ளி ‘நட்ட நடு’வாகும். நட்டுக்கு நடு, நடுவுக்கு நடு, நட்டநடு என்பனவெல்லாம் ஒரு பொருளனவாம். நட்டாறு என்பது நடுவாறு என்றாலும் நட்ட நடு ஆறு என்பதே சரியான நடுவாம். ‘நட்ட நடுவில் ஒரு புள்ளி வை’ என்பதற்கும் ‘நடுவில் புள்ளிவை’ என்பதற்கும் வேறுபாடு உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்