Skip to content

சொல் பொருள்

(பெ) – பார்க்க – நயம்

1. கனிவு, இனிமை,

2. நயப்பாடு, சிறப்பு, வளம்,

3. பண்பு நலம், நகரிகம்,

4. அன்பு, பரிவு,

5. நன்மை, 

6. அருள்,

சொல் பொருள் விளக்கம்

பார்க்க – நயம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pleasantness, sweetness,

excellence, superiority, fertility

civility

love, tenderness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
வண் பரி நவின்ற வய_மான் செல்வ
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல் – கலி 125/1-7

தாம் செய்யும் தவறுகளை உலகத்தில் கண்டவர் யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, அறியாதவர்கள் அவற்றைச் செய்யக்கூடாது என்று எண்ணாமலும், அவற்றைத் தடுப்பார் யாரும் இன்றியும், செய்கின்ற செயல்களுள் தாம் நெஞ்சறியச் செய்த கொடிய தீய செயல்களைப் பிறர் அறியாமல் மறைத்தாலும், அதனை அறிந்திருக்கிறவர்களில் தம்முடைய நெஞ்சத்தைக் காட்டிலும் நேரிடையான சான்று வேறு இல்லையாதலால், வளமான ஓட்டத்தில் பயிற்சியையுடைய வலிமை மிக்க குதிரையையுடைய செல்வனே! அதனை நான் நன்கு அறிந்திருந்தாலும், கனிவற்ற உன் போக்கினால் அன்பில்லாதவன் நீ என்று உன்னிடமே வந்து கடிந்துரைக்கிறேன்,

கயன் அற வறந்த கோடையொடு நயன் அற
பெரு வரை நிவந்த மருங்கில் – அகம் 291/4,5

குளங்கள் நீர் அற வற்றிய கோடையால் வளம் ஒழிய பெரிய மலை உயர்ந்த பக்கத்தில்

கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ 5
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழி படூஉம் என் தோழி – நற் 247/5-7

உச்சி உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே! நீ அன்புசெய்யாவிட்டாலும், பண்புடைமை இல்லாதவற்றைச் செய்தாலும் உன் வழியில்தான் நடக்கிறாள் என் தோழி;

நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/7

நம்மை மணங்கொள்ளாத அன்பில்லாதவரின் நட்பு

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141

நல்ல யாழின் இசையில் பயின்ற நன்மையையுடைய நெஞ்சால்

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – கலி 8/1,2

நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வழிகாட்ட, கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *