சொல் பொருள்
(வி) 1. வருந்து, 2. வருத்து, வாட்டு,
சொல் பொருள் விளக்கம்
வருந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffer, be in distress, cause pain, afflict
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு மாறு உண்டோ நெஞ்சே நமக்கு – கலி 62/17-19 நாம் கூறுவதை கேளாதவனாய் அவன் வருந்துகிறான், முற்பிறப்பில் நாம் வேறாக இருந்ததில்லை என்றொரு நிலை இருந்தால், அவனோடு மாறுபாடு உண்டோ, நெஞ்சே நமக்கு?” நலிதரும் காமமும் கௌவையும் என்று இ வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை நலியும் விழுமம் இரண்டு – கலி 142/56-58 என்னை வருத்தும் காமமும், ஊரார் பழிச்சொல்லும் என்ற இவை வலிமையான என் உயிரின் இரண்டு பக்கமும் காவடி தொங்குவதைப் போல் என்னை நலியச்செய்யும் இரண்டு துன்பங்களாக இருக்கின்றன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்