சொல் பொருள்
(வி) 1. கொடு, 2. அன்பு செலுத்து, 3. அருள் செய், இரக்கம் காட்டு,
சொல் பொருள் விளக்கம்
கொடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bestow, grant, show love, show grace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 85,86 காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன் நல்குவன் போல கூறி நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/3,4 முன்னர் விரும்பி அன்புசெய்பவன் போல இனிய மொழிகளைக் கூறி, இப்போது அன்புசெய்யானாயினும் நெடுங்காலம் நம்மீது நட்புக்கொண்டவனல்லவோ? பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/11,12 பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன், நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்