சொல் பொருள்
(பெ) 1. இளமை, 2. பசுவின் பெண்கன்று, 3. பெண் மீன் 4. இளம் பசு, இளம் பெண் எருமை,
சொல் பொருள் விளக்கம்
இளமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
youthfulness, tenderness, female calf, heifer, female fish, young cow, young female buffallo
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51 தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின் எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165 எருமையையும், நல்ல ஆன்களையும், (அவற்றின்)கருவாகிய கன்றுகளையும் வாங்குகின்ற கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1 கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன் நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3 நல்ல காளையைத் தழுவிக்கொண்டு இளம்பசுக்கள் வீடுதிரும்பும் நேரத்தில் மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3 மடப்பம் வாய்ந்த கண்ணினையுடைய மாண்புற்ற பெண் எருமையினை அணைந்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்