சொல் பொருள்
நாடிபார்த்தல் – ஆராய்தல்
சொல் பொருள் விளக்கம்
“அவன் ஆளென்ன, பேரென்ன!” என்னை நாடி பார்க்கிறான்”! என்பது தகுதியில்லாதவனாகக் கருதப்படும் ஒருவருன் தன்னை கருத்துரைத் தலைப்பற்றிக் கூறும் கடிதலாகும். நாடிபார்த்து நோய் இன்னதென அறிதல் மருத்துவ நெறி. அந்நெறியைத் தழுவிவந்த வழக்கு நாடி பார்த்தலாம். பதம் பார்த்தல் என்பதும் அது. நாடி பார்த்தல், நாடிப் பார்த்தலும் (துப்பறிதலும்) கொண்டதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்