சொல் பொருள்
(வி) 1. நிறுவு, நிலைநிறுத்து, 2. ஊன்று, நடு, விளக்கேற்று, 3. ஏற்படுத்து, உண்டாக்கு
சொல் பொருள் விளக்கம்
நிறுவு, நிலைநிறுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
establish, institute, set up, instal, form, create
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறன்நிலை திரியா அன்பின் அவையத்து திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக – புறம் 71/7-9 அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய அவைக்களத்து அறத்தின் திறப்பாடு இல்லாத ஒருவனை நிலைநிறுத்தி, முறை கலங்கி கொடுங்கோல் செய்தேன் ஆகுக யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10 இராபொழுதைக் காத்திருப்போர் ஏற்றிய நெருங்கிய விளக்குகள் மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15 மத்தி என்பவனால் உருவாக்கப்பட்ட கல் பொருந்திய குளிர்ந்த துறைமுகத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்