சொல் பொருள்
(பெ) நடு,
சொல் பொருள் விளக்கம்
நடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
middle, centre
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 441,442 கீழ்கடலை எல்லையாகக்கொண்டு, கடல்(அடிவானத்தின்) நடுவே பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல பல் மீன் நாப்பண் திங்கள் போல பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை – பதி 90/17,18 பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல மலர்ந்த சுற்றத்தாரோடு பொலிவுடன் திகழ்கிறாய்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்