சொல் பொருள்
(பெ) நாவலந்தீவு, ஜம்புத்தீவு,
சொல் பொருள் விளக்கம்
நாவலந்தீவு, ஜம்புத்தீவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one of the seven islands
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்டைக்காலத்தில், இந்த அண்டம் ஏழு தீவுகளைக் கொண்டது என்றும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை நீர்மப் பொருளால் சூழப்பட்டது என்றும் நம்பினர். அவற்றுள் உப்புநீரால் சூழப்பட்ட தீவு ஜம்புத்தீவு எனப்பட்டது. ஜம்பு என்பதற்கு நாவல் என்று பெயர். எனவே இது தமிழில் நாவலந்தீவு எனப்பட்டது. தீங்கனி நாவல் ஓங்கும் இத் தீவினில்” என்று மணிமேகலை (9:17) குறிப்பிடுகிறது. எனவே நாவலந்தீவைத் தமிழ் இலக்கியங்கள் நாவல் அம் தண் பொழில் என்று கூறுகின்றன. இச் சொற்றொடரே நமது நாடான இந்தியாவையும் குறிக்கப் பயன்பட்டது. நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – பெரும் 465 நாவலால் பெயர்பெற்ற அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/8,9 இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில் உள்ள கிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்