சொல் பொருள்
(பெ) விறைப்பான பருக்கைகள் உள்ள சோறு,
சொல் பொருள் விளக்கம்
விறைப்பான பருக்கைகள் உள்ள சோறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stiff boiled rice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த நிமிரல் என்ற சொல் சங்க இலக்கியத்தில் மூன்று முறை வந்துள்ளது. அந்த மூன்று முறையும் அது கொக்கு உகிர் நிமிரல் என்றே சொல்லப்படுகிறது. கொக்கின் கால் நகத்தைப் போன்று விறைப்பாக உள்ள பருக்கைகளை நிமிரல் எனலாம். கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை – நற் 258/3-8 கதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில் செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க, பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட, கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய அகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை, பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி – புறம் 395/36,37 கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர – புறம் 398/25
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்