சொல் பொருள்
(வி) 1. வரிசையாகு, 2. ஒழுங்குபடு, முறைப்படு,
2. (பெ) 1. வரிசை, 2. கூட்டம், திரள், 3 . பசுக்கூட்டம்,
சொல் பொருள் விளக்கம்
வரிசையாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be in a row, be orderly, row, herd, collection, herd of cows
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116 வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும், சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/4 சிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும் விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி பரி 14/13-15 நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் சுருக்கங்களையுடைய அரும்புகளையுடைய காந்தளின் நெடிய பூங்கொத்துக்கள் மலர்ந்த வளமையான இதழ்களின் வரிசைகள்தோறும் கொழுந்துவிட்டுப் படர்ந்த கொடியில் தோன்றிய மென்மையான அழகுடைய தோன்றி நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 744 உயரமான யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8,9 இனிய தெளிந்த ஓசையையுடைய மணிகளைப் பூண்ட பயன் மிக்க பெரிய பசுக்கூட்டம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்