சொல் பொருள்
நிலம் – நன்செய்
புலம் – புன்செய்
சொல் பொருள் விளக்கம்
செய்தற்கு ஏற்பப் பயன் தருவது செய்யாம். பண்ணுதல் செய்தல்- தொழிற் குறித்தே பண்ணை என்பதும் வந்தது. செய்க்குப் பண்படுத்துதல் முதண்மை. அது ‘பண்பாடு’ எனப்படும். வாழ்வுக்கும் ‘பண்பாடு’ இன்றியமையாததே. ‘நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்’ என்பது நிலம் – நன்செய் என்பதைக் காட்டும். ‘வரகு விளை புன்புலம்’ என்பது புன் செய்யைக் காட்டும். புன் புலம் – புன்செய் என்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்