சொல் பொருள்
(வி) 1. சிறிது சிறிதாகத் தேய்ந்து இல்லையாகு, 2. சிறிது சிறிதாகத் தேய்த்து இல்லையாக்கு,
சொல் பொருள் விளக்கம்
சிறிது சிறிதாகத் தேய்ந்து இல்லையாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
diminish gradually and vanish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50 நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்து விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 193 விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப் பயந்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்