சொல் பொருள்
(பெ) 1. வெள்ளம், 2. ஆழம்,
சொல் பொருள் விளக்கம்
வெள்ளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flood, depth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/6 ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில் புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/52,53 பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும் வெள்ள நீர் ஆழத்தினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்