சொல் பொருள்
வளைவு இல்லாமலிரு, செவ்வையாக இரு, ஒத்திரு, இளகு, மென்மையாகு, உடன்படு, உறுதிகொள், நிச்சயி, எதிர், சந்தி, பொருந்தியிரு, இசைவாக இரு, வளைவு இல்லாதது, செவ்வையானது, செம்மை, செப்பம், ஒப்புமை, நிகர், செங்குத்து
சொல் பொருள் விளக்கம்
வளைவு இல்லாமலிரு, செவ்வையாக இரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be straight and perfect, resemble, match, become soft, agree, consent, resolve, determine, come in opposition, encounter, be fit, being straight, perfect, refinement, nicety, similarity, equality, verticality
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316 அரம் கீறியறுத்த இடம் செவ்வையாகிய விளங்கும் வளைகளும், பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் – நற் 10/2,3 பொன்னை ஒத்திருக்கும் மேனியில் நீலமணி போலும் தாழ்ந்த நல்ல நெடிய கூந்தல் நரையோடு முடியப்பெற்றாலும் நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151/5 உடைந்துபோன என் நெஞ்சத்துடன் அவனுக்காக மனமிளகமாட்டேன் நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி நீடாது – நற் 130/7,8 அவருக்கு உடன்பட்ட என் நெஞ்சினையும், அவர் பிரிவால் நெகிழ்ந்துபோன தோள்களையும் வாடிப்போன மேனியின் வரிகளையும் பார்த்தாவது தனது பிரிவை நீட்டிக்காது நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/10,11 நம்மவர்கள் பெண்கொடுக்க நிச்சயித்தால், அவருடன் இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர் குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு – பெரும் 384 இளைய திங்களைச் செம்பாம்பு எதிர்கொண்டாற் போன்று இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் எம் கணவனை யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/3-5 இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும் நீயே என் கணவனாக இருக்கவேண்டும், நானே உன் நெஞ்சுக்கு இசைவானவளாய் இருக்கவேண்டும். நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 62,63 நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல், சிக்கென்ற நிலையினையுடைய பொருதுகின்ற வாயுடைய(இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க; நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை – பட் 22,23 நேர்த்தியான நகைகளை அணிந்த பெண்கள், உலருகின்ற நெல்லைத் தின்னும் கோழியை (விரட்ட)எறிந்த வளைவான அடிப்பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணி, நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 13 சமமாய் எடைகட்டி(பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய் நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 238,239 செங்குத்தைக் கொண்ட(=செங்குத்தான) உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம் போன்று (தேனீக்கள்)கட்டிய, தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்